Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரத் பயோடெக் அறிவிப்பால் மகிழ்ந்த மக்கள்! 20 கோடி கோவாக்சின் தயாரிப்பு!

கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் குஜராத்தில் உள்ள தங்களது துணை நிறுவனம் மூலம் மேலும் 20 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் கோவிசில்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

 

விரைவில் ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியில் இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. கோவிசீல்டு போலவே கோவாக்சின் அதிக திறன் கொண்டு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் கொரோனாவை எதிர்கொள்ளும் என்று ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

 

இந்த நிலையில் கோவாக்சின் தயாரிப்புகளை அதிகப்படுத்துவதாக பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

 

குஜராத்தின் அங்கலேஷ்வரில் உள்ள அதன் துணை நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்க உள்ளது அறிவித்துள்ளது.

 

ஒரு ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அதேபோல் ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள பயோடெக் நிறுவனத்தின் மூலம் தடுப்பூசி தயாரிப்புகள் நடந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே.பால் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 200 கோடி தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version