எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

0
142

சென்ற 8ம் தேதி நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு சோக சம்பவம் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி உட்பட சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் நினைத்துப் பார்த்திருக்க கூட மாட்டார்கள். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கின்ற காட்டேரி பள்ளத்திற்கு அருகில் நடைபெற்ற ஒரு விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் புரட்டி போட்டுவிட்டது
.

அதோடு இந்த சம்பவம் தொடர்பாக அன்றைய தினமே பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டபடியே உரையாற்றினார். அவரை பார்த்த முக்கிய அமைச்சர்களும் கண்கலங்க தொடங்கினார்கள்.

இந்த ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி ஒரு விபத்தில் பலியானவர்கள் அந்த விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன்  வருண்சிங் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

அப்படி வெளியான தகவல்களில் தற்போது வெளிவந்து இருக்கக்கூடிய ஒரு தகவலின் அடிப்படையில், உயிர் பிரியும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் என்ன தெரிவித்தார் என்பது தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. விபத்து நடந்த பகுதியில் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக களத்தில் இறங்கி காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

எவ்வாறு விபத்து நடந்தது? என்ன நடந்தது? ஹெலிகாப்டரில் இருப்பவர்கள் யார்? என்ற விபரங்கள் எதையும் அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட எல்லோரையும் கிராம மக்கள் மீட்டு அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதனடிப்படையில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களையும், அவசர ஊர்தியில் கிராம மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அப்போது அவசர ஊர்தியில் இருந்தவர்கள் மாதத்தின் கடைசி நேர சம்பவங்களையும் தங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் அவசர ஊர்தியை இயக்கிய ஓட்டுனர் ராமமூர்த்தி கூறியிருப்பதாவது 12:30 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்றது என்று உதவி எனக்கு அழைப்பு வந்தது. சரியாக 12 40 மணி அளவிற்கு சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்று விட்டோம்.

அங்கு அவசர ஊர்தியில் சென்றவர்கள் இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள் வண்டியில் இருப்பது பிபின் ராவத்  என்பது எங்களுக்கு தெரியாது மிக மிக அவசரம் என்பது சூழ்நிலையை பார்க்கும் போது புரிந்தது உடனடியாக எந்த விதமான தாமதமும் செய்யாமல் மருத்துவமனைக்கு அவசர ஊர்தி செலுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

மருத்துவ உதவியாளர் விக்னேஷ் அந்த அவசர ஊர்தியில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்திருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, விபத்து நடைபெற்ற ஹெலிகாப்டரில் இருப்பது பிபின் ராவத் என்று எங்களுக்கு தெரியாது. அவர் யார் என்று தெரியாமலேயே அவரை அவசர ஊர்தியில் ஏற்றி தந்தோம் என கூறியிருக்கிறார்.

அதே அவசர ஊர்தியில் குரூப் கேப்டன் அவர்களையும் ஏற்றினார்கள் இரண்டு பேரையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து வந்தோம் அவர்களை உயிருடன் கொண்டு போய் சேர்த்து விட்டோம். அப்போது பிபின் ராவத் ஒரு சில வார்த்தைகளை பேசினார் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ஹிந்தி வார்த்தைகள் ஆகவே இது என்னவென்று எனக்கு சரியாக புரியவில்லை. அருகில் இருந்த மருத்துவ அதிகாரியிடம் அவர் ஏதோ உரையாற்றினார் எப்படியாவது தன்மையும் தம்முடன் வந்திருப்பவர்களின் காப்பாற்றுமாறு அவர் தெரிவித்தது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது எனவும் இந்த ஹெலிகாப்டரில் வருகை தந்தவர்கள் யார், யார், எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பாகவும், அந்த நேரத்தில் யாருக்கும் முதலில் தெரியாமல்தான் இருந்திருக்கிறார், நேரம் செல்ல செல்ல தான் சம்பவத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும், பயணம் செய்தவர்களின் விவரங்கள் குறித்தும், தெளிவான விவரங்கள் வெளியாக அதன்பிறகுதான்  நஞ்சப்ப சத்திரம் பகுதி வாழ் மக்களுக்கு விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன தங்களுடைய பகுதியில் நாட்டில் மிக முக்கிய அவரை இழந்து விட்டோமே என்று இன்றளவும் அங்கேயே வசித்து வரும் மக்கள் மத்தியில் வேதனை இருப்பதை நம்மால் உணர முடிகிறது என்று சொல்லப்படுகிறது.