Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் கொரோனா இரண்டாவது அலையானது மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது.

பல இடங்களில் இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலை மற்றும் புது வைரஸ், கருப்பு பூஞ்சை, டெங்கு என பல நோய்கள் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சலும் வந்திருப்பதாக பெரும் அதிர்ச்சியான செய்தி வெளிவந்திருக்கிறது.

இந்த நிலையில் கேரளா, ராஜஸ்தான் ,ஹரியானா மத்தியப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.மேலும் பறவை காய்ச்சல் காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் பறவைகள், காகங்கள், வாத்துகள் ஆகியன உயிரிழந்த நிலையில், உயிரிழந்த பறவைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த பறவைக் காய்ச்சலின் காரணமாக டெல்லியில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் H5N8 என்ற வைரஸ் பறவைகளிடமிருந்து மனிதர்களை தாக்கி வருகிறது.

இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென ஒரு சிறுவன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியான மாநிலத்தில் வசித்து வந்த சிறுவன் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்த இருக்கின்றான்.

இதனையடுத்து பறவைகள் எங்கேனும் இறந்து கிடந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள் என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்திருக்கிறது. இந்த வைரஸ் கண், வாய், மூக்கு, சுவாசம் என்று வழியாக பரவுகிட்டது. மேலும் இதனால் தொண்டை வலி, உடல்வலி, சளி, தலைவலி, மூச்சு விட சிரமம் போன்ற அனைத்தும் ஏற்படும் என்று பேசி நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்து உள்ளது.

Exit mobile version