Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மணிப்பூரின் அடுத்த முதலமைச்சர் யார்? அறிவித்தது பாஜக மேலிடம்!

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மீதமிருந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தோல்வியை தழுவிய பாஜக எப்படியும் பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று நினைத்திருந்த சூழ்நிலையில் அந்த கட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமே இல்லாத ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான பகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 2 கட்சிகளிடமும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற 4 மாநிலங்களிலும் ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது.

இந்த சூழ்நிலையில், மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 60 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் 32 தொகுதிகளை இந்த கட்சி கைப்பற்றியிருக்கிறது. இதனை தொடர்ந்து புதிய அரசு அமைக்கும் பணி அந்த மாநில பாஜக ஆரம்பித்திருக்கிறது.

புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் நேற்று முன் தினம் சட்டசபை கட்சி கூட்டம் நடந்தது. மேலிட பார்வையாளர்களான நிர்மலா சீதாராமன், கிரன் ரிஜிஜு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரேண்சிங் சிங் மறுபடியும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கூறயிருக்கிறார்கள் பாஜகவை சார்ந்தவர்கள்.

இதேபோன்று கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியையமைக்க உரிமை கூறுவதற்காக நேற்று ஆளுநரை சந்திருக்கிறார்கள் பாஜகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்திருக்கிறது.

மார்ச் மாதம் 23ம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவின் புதிய முதலமைச்சர் யார் என்று முடிவு செய்வதற்காக நேற்றைய தினம் சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

Exit mobile version