சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸ் பிஸ்கட்.சிலர் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள்.பெரும்பாலும் மைதா,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தி தான் பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது.
இந்த பிஸ்கட்களை சாப்பிடுவதால் உடலுக்கு பலவித பிரச்சனைகள் ஏற்படும்.மைதாவிற்கு பதில் கோதுமை பிஸ்கட் எடுத்துக் கொண்டால் நல்லது என்று பலர் தெரிவிக்கின்றனர்.ஆனால் கோதுமை பிஸ்கட்டில் அதிகளவு கலோரிகள் இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.
பிஸ்கட் சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள்:
1)தினமும் பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு அதிகமாகி நீரிழிவு நோய் உருவாகிவிடும்.
2)தொடர்ந்து பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறு உப்பசம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
3)பிஸ்கட்டில் இருக்கின்ற டிரான்ஸ் கொழுப்பு நமது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து நோய் பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும்.
4)உப்பு கலந்த பிஸ்கட்டை சாப்பிடுவதால் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாகும்.பிஸ்கட் தயாரிக்க அதிகளவு சர்க்கரை கொழுப்பு அமிலங்கள் சேர்க்கப்படுகிறது.இந்த அமிலங்கள் உடலில் அதிகமாக தேங்கினால் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
5)தினமும் பிஸ்கட் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம்,பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இதனால் தினமும் பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.