Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Bitcoin பரிவர்த்தனையில் ஈடுபடுவர்கள் குற்றவாளிகள்! காவல்துறை எச்சரிக்கை!

பிட்காயின் கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் ஏற்படும் விலைகளின் ஏற்ற இறக்கங்களை கையாள்வதற்கு மத்திய மாநில அரசுகள் சார்ந்த அமைப்புகள் எதுவுமில்லை எனவும் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் ஆகியவை அரசு சாரா சட்டவிரோதமான ஒரு பரிவர்த்தனை எனவும் அதில் மக்கள் முதலீடு செய்து ஏமாந்து விட்டால் அரசு எந்தவித பொறுப்பினை ஏற்காது என்றும் காவல் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.

எனவே பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற அனைத்து மக்களும் சட்ட விரோதமான செயல்களை செய்வதால் அவர்கள் குற்றவாளிகளே என காவல்துறை சார்பிலிருந்து பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version