உடலில் குணப்படுத்த நோய் பாதிப்புகளில் ஒன்றாக சர்க்கரை உள்ளது.கடந்த காலங்களை விட தற்பொழுது சர்க்கரை நோய்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது.இந்நோய் பாதிப்பு இருப்பவர்கள் அதில் இருந்து எப்படியாவது மீண்டு விட மாட்டோமா என்று ஏங்கி கொண்டிருக்கின்றனர்.
இந்நோயில் இருந்து முழுமையாக மீள முடியாது என்றாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.அதன்படி கோவைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)கோவைக்காய்
2)தேங்காய் துருவல்
3)வர மிளகாய்
4)எண்ணெய்
5)கடுகு
6)சின்ன வெங்காயம்
7)உப்பு
8)மஞ்சள் தூள்
செய்முறை விளக்கம்:-
ஐந்து கோவைக்காயை வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் 1/4 தேக்கரண்டி கடலை பருப்பு போட்டு பொரியவிடவும்.
பிறகு அதில் 1/4 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரியவிடுங்கள்.பிறகு ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வதக்குங்கள்.பிறகு அதில் இரண்டு வர மிளகாயை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.அடுத்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.கோவைக்காய் வெந்து வந்ததும் ஐந்து தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
இப்படி கோவைக்காய் பொரியல் செய்தால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.கோவைக்காயில் ஜூஸ் செய்து பருகினாலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.