ரஷ்யாவில் நிகழ்ந்த வினோத திருமணம்!!

0
109

திருமணம் என்றாலே ஆண் பெண் இருவருக்கும் இடையேயான உறவினை வலுப்படுத்திக் கொள்ள பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நல்ல நேரம்,காலம் பார்த்து நடத்தப்படுவதாகும். மேலும் இம்முறையே தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் முதல் இன்றளவும் வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

பிறகு காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக நினைத்து சிலர் வழக்கத்திற்கு மாறாக தாம் நேசிப்பவர் தன் பாலினத்தவர் எனத்தெரிந்து இருந்தும் அவரை திருமணம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு பெண் பெண்ணையே திருமணம் செய்து கொள்வது அல்லது ஒரு ஆண் ஆணையை திருமணம் செய்து கொள்வது மேலும், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தற்போது நடைமுறையில் உள்ளது.

அதன்பிறகு இதனையும் மாற்றி தாம் நேசிக்கும் உயிரினங்களுடன் திருமணம் செய்யத் தொடங்கினர்.இதில் ஒரு பெண் அவரது வீட்டிலுள்ள வளர்ப்பு நாயின் மீது உள்ள அளவற்ற அன்பினால் அந்த நாயை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் மிகவும் வேடிக்கையாக இருந்தது.

இந்தத் திருமணத்திற்கு எல்லாம் ஆப்பு வைக்கும் வகையில் தற்சமயம் ரஷ்யாவை சேர்ந்த 24 வயது இளம்பெண் தாம் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த சூட்கேஸ் ஒன்றை திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்படி ஒரு செய்தியைக் கேட்கும்போது நம்மில் பலருக்கும் பைத்தியக்காரத்தனமாக இருக்கும்.

ஆனால் இதுகுறித்து ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம்பெண் கூறுவது: சிறுவயதிலிருந்தே தனக்கு உயிரற்ற பொருட்கள் மீது அதிக அளவு ஈர்ப்பு இருப்பதாகவும் அதன் தாக்கமே தன்னை சூட்கேஸை திருமணம் செய்து கொள்ளக் கூடியதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனக்கும் ஒரு ஆண் மீது விருப்பம் இருந்ததாகவும், ஆனால் அந்த ஈர்ப்பு தன்னுடைய சூட்கேஸ் மேல் இருந்த ஈர்ப்பை விட குறைவாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.பிறகு சூட்கேஸ் மேல் காதல் ஏற்பட்டு அதனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் மனிதர்களுடன் இருப்பதைவிட பொருட்களுடன் இருக்கும் தருணமே தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நாடு தெரிவிக்கும் தகவலின்படி இத்திருமணத்தின் போது ரெய்ன் ஜார்டன் உடன் அவரது நண்பர் ஒருவரும் அந்த திருமணத்தில் பங்கெடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற இந்த திருமணம் மக்களிடையே வேடிக்கையான உணர்வினை ஏற்படுத்தி உள்ளது