Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டசபை தேர்தல்! அதிமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா?

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும்,பாரதிய ஜனதா கட்சி 10 இடங்களிலும்,அதிமுக 4 இடங்களிலும்,எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் கிடைக்கின்றது. புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்திருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டணி அமைந்தது மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகும் உறுப்பினரும் உறுதியாகி இருக்கிறது.இந்த கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும்,என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் நிற்க இருப்பதாகவும்,ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.அதோடு முதலமைச்சர் வேட்பாளர் தேர்தல் முடிந்த பின்னரே அறிவிக்கப்படுவார் எனவும்,தெரிவிக்கப்பட்டிருக்கிறது.சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்,புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட இருக்கிறது.மீதம் இருக்கின்ற 14 இடங்களில் பாஜக 10 இடங்களில் போட்டியிட உள்ளது.அதேபோல அதிமுக நான்கு இடங்களில் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version