BJP DMK: திமுக தனது சொந்த பத்திரிகையில் பஜாகவுடன் கூட்டணி இல்லை என்பதை காட்ட அண்ணாமலை இருக்கும் புகைப்படத்தை தவிர்த்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா முடிந்ததிலிருந்து திமுக பாஜக கள்ள உறவு குறித்து தான் பத்திரிக்கை ஊடகங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை அனைவரும் பேசி வருகின்றனர். இரு தரப்பினரும் இதனை முழுமையாக எதிர்த்தாலும் இவர்கள் பொதுவெளியில் இருந்த நெருக்கமானது அதனை மறுக்க வைக்கிறது. அந்த வகையில் பாஜக ஒரு பக்கம் திமுகவை பங்காளிகள் என்று கூறி நிருபிப்பதும் அதே போல திமுக ஒரு பக்கம் தனது கொள்கையிலிருந்து எப்பொழுதும் மாற மாட்டோம் என்றும் கூறி வருகிறது.
இதனை அடுத்த கட்டத்திற்கு மக்களுக்கு உணர்த்தும் வகையில் தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பொழுது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டும் இருக்கும் படத்தை அச்சிட்டுள்ளனர். மாறாக அண்ணாமலை மற்றும் இதர பாஜக உறுப்பினர்கள் இருப்பதை முற்றிலும் தவிர்த்து உள்ளனர்.
இதன்மூலம் பொதுப்படை தன்மையாக இருப்பதை திமுக மக்களுக்கு உணர்த்துவதாக செய்தி ஊடகங்கள் கூறுகிறது. ஆனால் இருவரும் மாறி மாறி எங்களுக்குள் கூட்டணி இல்லை என்று கூறினாலும் சமீபகாலமாக இருவரின் நட்புறவானது மிகவும் நெருக்கமானதாகவே உள்ளது.