Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக.மற்றும் ம.நீ.ம. கட்சியின் தலைவர் இருவருக்கும் இடையே ஆட்டோ மூலம் போட்டி! போட்டியில் வெற்றி பெற போவது யார்? 

bjp-and-m-n-m-competition-by-auto-between-the-two-party-leaders-who-is-going-to-win-the-tournament

bjp-and-m-n-m-competition-by-auto-between-the-two-party-leaders-who-is-going-to-win-the-tournament

பாஜக.மற்றும் ம.நீ.ம. கட்சியின் தலைவர் இருவருக்கும் இடையே ஆட்டோ மூலம் போட்டி! போட்டியில் வெற்றி பெற போவது யார்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நேற்று மாலை மண்,மொழி,மக்களை காக்க என்ற பொதுக்கூட்டத்தை நடத்தினார்.அதில் அதிமுக வை பார்த்து உங்களுக்கு ஆளும் திறமையும்,தகுதியும் இல்லை என காரசாரமாக பேசினார்.இரு கட்சிகலுக்குல்ளையும் கிரிமினல்ஸ் தான் உள்ளனர் என்றார்.பிறகு எங்கள் கட்சியில்  சாதனையாளர்கள் உள்ளனர் என பெருமை பேசிக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அவர் பேசியது அதிமுக தலைவர் கூறியுள்ளார்,நான் ஆட்சிக்கு வந்த பிறகு அனைவருக்கும் வாஷிங்மிஷின் தருவேன் என்று தண்ணீரே இல்லாத ஊரில் மக்களுக்கு வாஷிங்மிஷினை வைத்து என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை என கிண்டல் அடித்தார்.பிறகு எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டு அவரும் 3 ஆட்சியில் தான் வெற்றி பெற்றார்.அதுபோலதான் நானும் என சொல்லாமல் சொன்னார்.

இவற்றையெல்லாம் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல் ஹாசன் ரோட்டில் நடந்து சென்று அங்குள்ள ஆட்டோ ஓட்டுனரிடம் தன்னை தாஜ் ஹோட்டலில் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.அப்போது அங்கிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.அதனையடுத்து அவர் ஆட்டோவில் சென்ற போது பலர் கைகளை அசைத்தனர்.அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அதேபோல பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் காந்திபுரம் பாஜக அலுவலகத்திலிருந்து ராமநாதபுரம் தேர்தல் அலுவலகத்துக்கு அழைத்து செல்லுமாறு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டுள்ளார்.அவர் ஆட்டோவிலிருந்து இறங்கியதும் அங்குள்ள பெண் தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேர்த்தனர்.இப்படி இருவருக்குமிடையே போட்டி நிலவி வருகிறது.இதில் கடைசியாக யார் வெற்றிபெற போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம் மற்றும் கட்சி தேர்த்தலின் போது தான் ஆட்டோ,பேருந்து போன்றவை இவர்களின் கண்ணிற்கு தெரியும் என அங்குள்ளவர்கள் வசை பாடினர்.

Exit mobile version