PJB Annamalai: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் பாஜக அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தற்போது தமிழகத்தில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. எதிர்கட்சி தலைவர்கள் திமுக அரசு மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்கள் அடங்கிய எப்ஐஆர் காப்பி சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியினர் சென்னையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அக் கட்சியினர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் திமுக நிர்வாகி ஞானசேகரன் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் கசிய விட்டு இருக்கிறார் என செய்தியாளர் சந்திப்பில் பாஜக அண்ணாமலை தனது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்.
மேலும், ஞானசேகரன் திமுக அரசு நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருப்பதற்கான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் நாட்டில் பெண் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசினார். பாதிக்கப்பட்ட பெண் தவறு செய்து இருப்பது போல விவரங்கள் இடப்பட்டு எப்ஐஆர் காப்பி வெளியாகி இருக்கிறது. இதற்கு அமைச்சர் ரகுபதி வெட்கப்பட வேண்டும் கூறினார்.
மேலும், கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்.எப்ஐஆர் காப்பியை காவல் துறையினரால் மட்டுமே கசிந்து இருக்க வேண்டும். திமுகவிற்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என கூறி இருக்கிறார்.