Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக்கிய நபரை சந்தித்த அண்ணாமலை! தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாபெரும் திருப்பம்!

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக திரு அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.

அண்மையில் சென்னையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்ற 16 ஆம் தேதி சேலம் மார்க்கமாக சென்னை வந்த அண்ணாமலைக்கு அந்த கட்சியின் சார்பாக மிகப்பெரிய உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தற்சமயம் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அண்ணாமலை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆக இருக்கக்கூடிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக முதல் முறையாக சந்தித்திருக்கிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மலர்க்கொத்து வழங்கி இருக்கின்றார். அவருக்கு தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதுவரையில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை தற்போது முதல் முறையாக இளம் தலைமுறையான அண்ணாமலை அவர்களுக்கு தமிழகத்தில் பாஜக தலைவராக பொறுப்பு கொடுத்து அழகு பார்த்து இருக்கிறது. இதன் மூலமாக இளைஞர்களை கவர்வதற்கு அந்த கட்சி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் இன்று வரையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை அந்த கட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அண்ணாமலை அந்த கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version