உள்ளாட்சித் தேர்தல்! கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த ருசிகர பதில்!

0
127

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி ,தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இதுவரையும் நடத்தப்படாமல் இருக்கிறது.புதிதாக இந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன இந்த மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகின்றது. அதேபோல தமிழக அரசியல் கட்சிகளும் இந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில் தேர்தல் நடைபெற இருக்கின்ற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக பாரதிய ஜனதா கட்சி குழு ஒன்றை அமைத்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில், எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்து இருக்கின்றார்.