Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வு அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாஜக! முதல்வருக்கு சவால் விட்ட அண்ணாமலை!

தமிழக அரசின் சார்பாக சென்ற செப்டம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு.

ஆனால் அதனை சமீபத்தில் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி இதனை எதிர்த்து ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆனாலும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பல கட்சிகள் புறக்கணித்திருந்தனர் திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக இந்த கூட்டத்தில் பங்கு பெறவில்லை இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாண்புமிகு முதலமைச்சருக்கு தமிழக பாஜக சார்பாக எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், ஆளுநர் வழங்கிய பதிலையும், கேட்ட கேள்வியையும், அனுப்பிவிட்டு, டேட்டாவை தெரிவித்துவிட்டு, முதலமைச்சர் அவர்கள் எப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் கூறுகிறாரோ அன்றைய தினம் தமிழக பாஜக முதல் கட்சியாக அந்த கூட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவித்திருக்கிறார்

ஏனெனில், தமிழக மக்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும், நீட் தேர்வு தொடர்பான உண்மை தெரிய வேண்டும், எத்தனை பேர் தேர்ச்சியாகி இருக்கிறார்கள் என்ற விவரம் அனைவருக்கும் தெரிய வேண்டும்.

எத்தனை பேர் எந்த பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை தெரிவித்து விட்டால் நீங்கள் சமூகநீதியின் பெரிய போராளி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

ஆகவே தயவு கூர்ந்து அரசியல் காரணத்திற்காக நீட் தேர்வை பற்றி உங்களுடைய நிலைப்பாடு முற்றிலுமாக தவறானது. அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் பாஜகவிற்கு இல்லை. உண்மையான சமூக நீதியென்பது அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது சமூக நீதி இல்லை, அது குடும்ப ஆட்சி என்று விமர்சனம் செய்தார் அண்ணாமலை.

Exit mobile version