அவர்கள் இல்லாமல் பாஜக கட்சியை வீழ்த்த முடியாது!! முன்னாள் முதலமைச்சர் பேட்டி!!

0
201
bjp-cannot-be-defeated-without-them-former-chief-minister-interview
அவர்கள் இல்லாமல் பாஜக கட்சியை வீழ்த்த முடியாது!! முன்னாள் முதலமைச்சர் பேட்டி!!
காங்கிரஸ் கட்சி இல்லாமல் பாஜக கட்சியை எளிமையாக வீழ்த்திவிட முடியாது என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தனியார் ஓட்டல் ஒன்றில் 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் சான்றிதல்களை வழங்கினார்.
அப்போதுதான் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் இந்த கருத்தை தெரிவித்தார். அப்போது பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் “காங்கிரஸ் கட்சி இல்லாமல் பாஜக கட்சியை வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் பாஜக கட்சியை வீழ்த்தலாம்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த சமயம் உண்மையான தொண்டர்கள் தான் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். 2 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு மற்றும் ஊழல் நிறைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாம் போராடி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.