பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

0
173

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

கடந்த சில நாட்களாகவே பஞ்சமி நிலம் பற்றி தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

இதற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படமல்ல பாடம் என்று ட்விட்டரில் டிவிட் செய்திருந்தார். இதற்கு பதிலாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அசுரன் படத்தை பாடமாக எடுத்துக் கொள்வதால் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பதால் அதை பிரித்து தலித் மக்களுக்கு கொடுப்பார் என்று ட்வீட் செய்திருந்தார்.

இது தமிழக அரசின் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது இதனை மறுத்து ட்விட்டரில் மு.க. ஸ்டாலின் அவர்கள் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட பட்டா சிட்டாவை வெளியிட்டு முரசொலி அலுவலகம் தனிநபர் பட்டாவாக பதியப்பட்டது. இது பஞ்சமி நிலம் இடமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுபடியும் டிவிட்டரில் இராமதாஸ் அவர்கள் முலப் பத்திரத்தை காட்டாமல் இடம் யாரிடமிருந்து வாங்கப்பட்டது
என்று காட்டாமல் வெறும் பட்டா சிட்டாவை காட்டி மக்களை ஏமாற்றுகிறார் என்று தெரிவித்தார்.

பின்பு ஸ்டாலின் அவர்களை ராமதாஸும் அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயார் என்றால் மூலப் பத்திரத்தை நான் வெளியிட தயார் என்று மழுப்பலாக தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக பாஜகவினர் ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர் நேற்று முன்தினம் பாஜக தேசிய செயலாளர் ராஜா அவர்கள் மூலம் பத்திரத்தை வெளியிடாமல் வெறும் பட்டா சிட்டாவை காட்டி ஸ்டாலின் ஏமாற்றுகிறார்,

மக்களின் நிலத்தை அபகரிக்க என்ற படுபாதக செயலை செய்யும் கட்சி திமுகவா என்று வினா எழுப்பி இருந்தார்.

இதனை உறுதி செய்யும் வகையில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களும் அண்ணா அறிவாலயம் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்றும் இது தலித் மக்களிடையே ஒப்படைக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்றும் அனைவரும் இதையே சொல்லி வருவதாகவும் இதனால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகனிடம் புகாராக அளித்திருக்கிறார். இது மிகப்பெரிய புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.

இதனால் திமுக தரப்பு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக பாஜகவினரும் திமுகவை முரசொலி அலுவலகம் விஷயத்தில் வெளுத்து வாங்குவதால் தமிழக மக்களும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதே பஞ்சமி நிலம் விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கிய தடா. பெரியசாமி அவர்களும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது தான் என்று தெரிவித்திருந்தார். இவர் பாஜகவின் மூத்த தலித் தலைவர் ஆவார்.

திருமாவளவனும் கடந்த காலத்தில் சிறுதாவூர் பங்களாவில் இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும் தமிழக அரசு ஆய்வு செய்து தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார் அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால்பதிலளிக்க முடியாமல் திமுக தரப்பு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.