Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லியில் பாஜக கவுன்சிலர் அதிரடி நீக்கம்! ஏன் தெரியுமா?

தெற்கு டெல்லி மாநகராட்சியில், வசந்த் கஞ்ச் கவுன்சிலர் ( இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் ) பதவியில் இருக்கும் மனோஜ் மகாலவத் என்பவர் ஊழல் வழக்கில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்த பாஜக  கவுன்சிலர் ஒரு கட்டுமானம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் லஞ்சம் வாங்கியுள்ளார். இவர் லஞ்சமாக 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதால், சிபிஐ வழக்குப் பதிவு செய்து, இவரை கைது செய்துள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அதேஷ் குப்தா, கவுன்சிலர் மனோஜ் மகாலவத் என்பவரின் ஊழல் செயலை கண்டித்து அவரை கவுன்சிலர் பதவியில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து மாநில தலைவர் கூறியதாவது, “பாஜக கட்சி ஒருநாளும் ஊழலை மட்டும் பொறுத்துக் கொள்ளாது” என்பதனையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version