Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்!

BJP executive who slapped the police constable as a liar! Kannada reporting opposition parties!

BJP executive who slapped the police constable as a liar! Kannada reporting opposition parties!

போலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹகத் திரகே என்ற பகுதியில் போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே விலைமதிப்புள்ள ஒரு காரில் பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கவூர் வந்துள்ளார்.

அவ்வாறு வந்தவர் காருக்குள்ளே உட்கார்ந்து கொண்டு சாலையின் நடுவிலேயே காரை நிறுத்தியுள்ளார். அவர் நடுரோட்டில் காரை நிறுத்தியதும், அங்கிருந்த கான்ஸ்டபிள் இவரை ஓரமாக கார நிறுத்தும்படி கூறி உள்ளார்.

ஆனால் இவர் காரை ஓரமாக நிறுத்தாமல் தகாத வார்த்தைகளால் கான்ஸ்டபிளை திட்டியும், காரிலிருந்து கீழே இறங்கிய முன்னாள் எம்பி யான அவர் கான்ஸ்டபிளை பளார் என்று அறைந்துள்ளார்.

இவ்வாறு அவர் கான்ஸ்டபலிடம் நடந்து கொண்டதை அடுத்து உடனடியாக அவர் மேல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் கூடிய விரைவில் முன்னாள் எம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அரசு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும் சரி காவல்துறையிடம் இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version