சுட்டு பிடிக்கப்பட்ட பாஜக நிர்வாகி.. அன்று தமிழிசை இன்று செல்வபெருந்தகை!! ரவுடிச கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் அண்ணாமலை!!

0
416
BJP executive who was shot and caught. Annamalai gives shelter to rowdy gang!!

சுட்டு பிடிக்கப்பட்ட பாஜக நிர்வாகி.. அன்று தமிழிசை இன்று செல்வபெருந்தகை!! ரவுடிச கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் அண்ணாமலை!!

பாஜகவினர் அதிகப்படியான ரவுடிகளை கட்சியில் இணைத்து வருவது குறித்து பதிலளிக்கும் படி அண்ணாமலையை காங்கிரஸ் நிர்வாகி செல்வப் பெருந்தகை சாடியுள்ளார்.சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக தமிழகத்தில் ஒரு எம்பி கூட வர முடியாத நிலையில் அதன் வெளிப்பாட்டை மூத்த தலைவர்கள் அண்ணாமலை மீது திணித்தனர்.குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் கட்சியில் அதிக ரவுடிகள் இருப்பதாகவும் அவர்களை வைத்து மற்ற தலைவர்களை மிரட்டுவது மிகவும் தவறானது என கண்டிக்கவும் செய்தார்.

இவ்வாறு அவர் கூறியதற்கு அமித்ஷா முதல் பலரும் எச்சரித்தனர்.இதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் தற்பொழுது செல்வ பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், பாஜக கட்சியில் சீர்காழி சத்யா இணைந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.மயிலாடுதுறையில் கூலிப்படையில் மிகப்பெரிய தலை என்றால் சீர்காழி சத்யா தான்.ராமஜெயம் கொலை வழக்கு என தொடங்கி பல குற்றங்களில் இவரது பெயர் முன்னிலையில் உள்ளது.

https://x.com/SPK_TNCC/status/1806981185714729130

குறிப்பாக இவர் கோவையின் மோகன் ராமுக்கு ரைட் ஹேண்ட் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.அதுமட்டுமின்றி மக்கள் முன்னிலையிலேயே வழக்கறிஞரை ஓட ஓட வெட்டி கொன்ற குற்ற கணக்குகளும் இவர் மீது ஏராளம்.இவ்வாறு இருக்கும் கூலிப்படைகளை ஏன் பாஜக, கட்சியில் இணைக்கிறது இது சட்ட ஒழுங்கை பற்றி பேசும் தலைமைக்கு ஏற்றதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அது மட்டுமின்றி  சீர்காழி சத்யாவை பிடிப்பதற்காக காவல்துறையினர் பல திட்டமிட்டு இறுதியில் தப்பிக்க முயற்சித்த பொழுது காலில் சுடப்பட்டு பிடிபட்டார். இப்படிப்பட்ட கூலிப்படைகளை பாஜக கட்சியில் வைத்து நிர்வாகியாக உயர்த்தி பதவி ஒதுக்குவது முறையானதாக இருக்குமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். மேற்கொண்டு கள்ளச்சாராயம் சட்ட ஒழுங்கு என பேசும் அண்ணாமலை இது குறித்து கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.