Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா

உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை: கமலை போட்டுத்தாக்கிய எச்.ராஜா

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பாஜக தலைவர்கள் அவ்வப்போது வார்த்தை போர் நடத்திக் கொண்டு வருவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தியது குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு உலக அறிவும் சட்ட அறிவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது ஏற்கனவே நான்கு முறை திருத்தப்பட்டு தற்போது ஐந்தாவது முறையாக திருத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று முறை காங்கிரஸ் ஆட்சியில் திருத்தப்பட்டது. இதெல்லாம் கமலஹாசனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு உலகநாயகன் என்ற பெயர் வைத்தால் மட்டும் பத்தாது உலக அறிவும் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு சட்டமும் தெரியாது பாராளுமன்ற நடவடிக்கையும் தெரியாது’ என திருவாரூரில் பேட்டியளித்த தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். விரைவில் கமல்ஹாசனிடம் இருந்தும் ஒரு அதிரடியாக பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version