வாய்க் கொழுப்பால் சிக்கிக்கொண்ட பாஜக! கறார் காட்டும் அதிமுக!

0
110

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் திமுக, அதிமுக, கூட்டணியில் தொகுதி பங்கீடு ஆரம்பித்திருக்கிறது. திமுக பக்கம் நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது. இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலோ எப்போதும் போல தற்போதும் சர்ச்சைகளும், குழப்பங்களும், ஏற்பட்டு இருக்கின்றன இதற்கு இடையில் பாஜகவினரின் பேச்சுக்களும், சர்ச்சைகளும் இடம்பெறுகின்றன.

இந்தப் பேச்சுக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகளை பெறுவதில் சிக்கல்களை உண்டாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். தென்மாவட்டங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி இந்த வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற 5 தொகுதிகளில் திமுக கூட்டணி 3 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பாகவும், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுகவும், பாளையங்கோட்டை தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், தாராபுரம் தொகுதியில் திமுகவை சேர்ந்த அப்பாவு அவர்களும் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

4 பாஜகவை சார்ந்த எம்எல்ஏக்கள் தற்சமயம் இருக்கிறார்கள் அவர்கள் இருக்கின்ற மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பலப்படுத்தும் பணியில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற திசையன்விளை பேரூராட்சியில் போட்டியிடுவது குறித்து புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது.

அதாவது பாஜகவை பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் வருடத்திலிருந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து பயணம் செய்து வருகிறது, மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், என்று இந்த கூட்டணி தொடர்ந்து பயணித்து வருகிறது.

இந்த முறை அதிமுக கூட்டணியில் பெருவாரியான இடங்களை பெற்று வெற்றி பெற பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திசையன்விளை பேரூராட்சியில் ஒரு இடங்களில் கூட பாஜகவிற்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே கூறியிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக அதிமுக அமைப்பு செயலாளர் சீனிவாசன் வெளிப்படையாகவே உரையாற்றியது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அதாவது திமுகவை வீழ்த்துவதற்கு தனித்து களம் காண்பது தான் சரி பாஜகவுடன் கை கோர்த்தால் பின்னடைவாக தான் இருக்கும் என்று திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் கருதுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கட்சி தலைமையிடம் மிகவும் கறாராக உரையாற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற மன எண்ணத்தில் அதிமுக உள்ளதாக கூறப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பாஜக சட்டசபை உறுப்பினரான நைனார் நாகேந்திரனை ஆட்டம் காண வைத்தது.

பிறகு அவருடைய பேச்சு தான் இந்த நிலைக்கு காரணம் என்று உள்ளூர் பாஜகவிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. திருநெல்வேலி போன்ற தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் இதே நிலைதான் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அதிமுக பாஜக இடையே மறைமுகப் போட்டி ஏற்பட்டிருப்பதாக நிர்வாகிகளை தெரிவித்து வருகிறார்கள்.