வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

0
127

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சீமான் அவர்கள் “வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக கட்சி தான். அதனால் வெறுப்பு அரசியலை பற்றி பாஜக கட்சி பேசக்கூடாது. பாஜக செய்வது விருப்பு அரசியலா? இல்லை அவர்கள் செய்வது வெறுப்பு அரசியல்.

மொழி, இனம், மதம் சார்ந்து பிரிந்து இருப்பவர்கள் அவர்கள் தான். என்னுடைய எண்ணம் திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது இல்லை. திராவிடத்தை வளர்க்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன். தமிழ் தேசியத்தை வளர்ப்பது என்னுடைய எண்ணம்.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் விண்கலம் அனுப்பி பெருமை பீத்துகிறார்கள். முதலில் பூமியில் இருப்பவர்களுக்கு நீர் போன்ற அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தும் நீங்கள் எப்படி ஒரே கட்டமாக ஒரே தேர்தல் நடத்துவீர்கள்.

காஷ்மீரில் இருந்து ஒரே ரோடு என்பதை ஏற்றுக் கொள்வேன். ஒரே கொள்கை ஏற்றுக் கொள்வேன். ஒரே நீர் என்பதையும் ஏற்றுக் கொள்வேன். அதற்கு முன்னதாக கர்நாடக மாநிலத்தில் இருக்கும் காவிரி நீரை தமிழகத்திற்கு வாங்கி கொடுத்து விடுங்கள்.

2024ல் எனக்கு நீங்கள் நான்கு பேரும் எதிரிதான். காங்கிரஸ், பாஜக இரண்டும் தனித்தனியான வெவ்வேறு கட்சியாக இருக்கின்றது. ஆனால் இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் ஒன்றுதான்.

ராமதாஸ், திருமாவளவன் போன்ற மிகப் பெரிய ஆற்றல்கள் இந்த திராவிட ஆற்றல்களை எதிர்த்து போராட முடியாமல் சமரசம் ஆகி சென்று விட்டனர். ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் தனித்து நிற்கும் பொழுது கிடைத்த வாக்குகளை விட கூட்டணி வைத்த பிறகு அவர்களின் வாக்குகள் குறைந்து உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து கைது செய்யப்படுவதாக பரவும் செய்தி குறித்து பேசிய சீமான் அவர்கள் “நாங்கள் கைது செய்யப்படவுள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு ஐ யம் வெயிட்டிங். நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.