சென்ற ஜனவரி மாதம் 31ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக சார்பாக ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதமாக ஒரு சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அவரை கண்டிக்கும் விதமாக தமிழகம் எங்கிலும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனை தொடர்ந்து கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கின்ற சிறையில் அடக்கப்பட்ட அவர்மீது பிரிவினை உண்டாக்குதல், மற்றும் பொது அமைதிக்கு பங்கம் செய்தல் ,போன்ற பிரிவுகளில் சென்னை, தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் சுமார் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன .இவருடைய செயல்பாடுகள் சிலவற்றை மனதில் வைத்து இவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரை செய்திருக்கிறார்.
அவருடைய பரிந்துரையின் பெயரில் கல்யாணராமனை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது.