மத மோதலை உருவாக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வந்த பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு விட்டதாக கடந்த அக்டோபர் 16-ம் தேதி பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இன்று பாஜக நிர்வாகி கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, இவர் மீது ஒரு முறை குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.