தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

0
124

சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேர்தல் பார்வையாளர் கிஷன் ரெட்டி, சிடி ரவி, சுதாகர் ரெட்டி, ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகள் எந்தெந்த தொகுதி என இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், இருப்பதன் காரணமாக, அந்த கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் அதிமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து தெரிவிக்கும்போது, அதிமுகவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக எப்போதுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு ,கட்டப்பஞ்சாயத்து போன்றவை தமிழ்நாட்டில் அதிகமாகிவிடும் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே எப்பொழுதும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். என்பதே உண்மையான ஒன்று என தெரிவித்திருக்கிறார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக சி.டி ரவி தெரிவித்தபோது, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையானது எந்தவித சிக்கலும் இல்லாமல் நல்ல புரிதலுடன் நடைபெற்றது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல நாங்கள் அதிமுகவின் கூட்டணியில்தான் இருக்கின்றோம் அதிமுகவின் தலைவர்கள் எல்லோரும் நன்றாக விபரம் தெரிந்தவர்கள். யாரை கூட்டணியில் இணைக்கவேண்டும் யாரை விலக்கி வைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும். அதில் நாங்கள் தலையிடுவதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது சசிகலாவை அதிமுகவின் இணைப்பதற்கான முயற்சிகளை அதிமுகவுடன் நடந்த பேச்சு வார்த்தையின் மூலமாக பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்து வருவதாக ஒரு சில கருத்துக்கள் உலாவி வருவதை கருத்தில் கொண்டுதான் என்று சொல்கிறார்கள். அந்த விதத்தில் தமிழக பாஜக ஒதுங்கி கொண்டாலும் பாஜக டெல்லி அளவிலான தலைவர்கள் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. அதற்கு தமிழகம் வந்த அமித்ஷாவே உதாரணம் என்று சொல்கிறார்கள்.