Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது!

BJP leader arrested for sexually harassing mother and daughter

BJP leader arrested for sexually harassing mother and daughter

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது!

சென்னை எருக்கஞ்சேரி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் பாரதி ஜனதா கட்சியில் பெரம்பூர் என்னும் பகுதியில் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.பார்த்தசாரதியின் எதிர்வீட்டில் 9 மற்றும் 15 வயது குழந்தைகள் அவர்களது அம்மா என ஒரு குடும்பம் வசித்து வந்தன. அவர்களிடம் பார்த்தசாரதி தினமும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்,அந்த குழந்தைகள் பள்ளிக்கு போகும் பொழுதும் வரும் பொழுதும் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

அவரது பாலியல் தொல்லையின் காரணமாக அப்பெண் கடந்த 12 ஆம் தேதி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்.தனது எதிர் வீட்டில் இருக்கும் பாஜக பிரமுகர் பார்த்தசாரதி எனக்கும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பாஜக பிரமுகர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். ஆனால் அன்றைய தினமே ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.

பார்த்தசாரதி அப்பெண்ணிற்கும் அவளது இரண்டு குழந்தைகளுக்கும் மீண்டும் பாலியல் தொல்லைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார். மீண்டும் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் உடனடியாக பாஜக கட்சி பிரமுகர் பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசார் தெரிவித்தார்கள். இந்த புகார் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக பார்த்தசாரதி மீது பெண் கொடுமை ,வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 6 சட்டங்களின் பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் ஆபாச செயலை புரிதல், குந்தகம் விளைவிக்கும் வகையில் நடத்தல்,பாலியல் அத்துமீறல் குற்றம் கருதி மிரட்டல்,பெண்ணை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுதல்,பெண் கொடுமை,வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.

Exit mobile version