Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டியலின மக்களை காக்கா பிடிக்கும் பாஜக.. மோடி சொன்ன பலே திட்டம்! அடிசறுக்கும் விசிக!!

BJP likes to protect Scheduled Castes. Fan of sliding!!

BJP likes to protect Scheduled Castes. Fan of sliding!!

பட்டியலின மக்களை காக்கா பிடிக்கும் பாஜக.. மோடி சொன்ன பலே திட்டம்! அடிசறுக்கும் விசிக!!

நடைபெற போகும் தேர்தலில் பாஜக தமிழகத்தில் நிரந்தர வேரூன்றி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 25 சீட்களை கட்டாயம் பெறுவோம் என அண்ணாமலை தெரிவித்ததோடு அதற்கான பணிகளை தொடங்க ஆரம்பித்து விட்டது.

தமிழகத்தில் 25 இடங்களை பெற முதலாவதாக மோடியின் அறிவுரைகள் தான் செயல்படுத்தி வருகின்றனர். சென்ற முறை மோடி தமிழகத்திற்கு வந்த பொழுது இம்முறை வெற்றி பெற வேண்டும் பல இடங்களை தமிழகத்தில் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பல அட்வைஸைகளை கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

அந்த வகையில் இவர்களின் முதல் டார்கெட் ஆக இருப்பதே பட்டின இன மக்களின் ஓட்டுகள் தான். அந்த வகையில் கட்சி பொறுப்பில் இருப்பவர்கள் பட்டியலின மக்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் சமைத்த உணவை சாப்பிடுவது அவர்களை அழைத்து வந்து இவர்களது வீட்டில் விருந்து கொடுப்பது என்ற திட்டங்களை கூறியுள்ளதாகவும், முன்பை விட தமிழகத்தில் தாமரை குறித்து நல்ல அபிப்ராயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தாமரை மேல் உள்ள அபிப்பிராயத்தை நிலை நாட்ட உடனடியாக பூத் கமிட்டிகள் அமைத்து அதற்கான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பல தவறுகள் மாநில அரசு செய்து வருகையில் அதனையெல்லாம்  கண்டுபிடித்து மக்களுக்கு சுட்டிக்காட்டி கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவர் சொன்னதை செயல்படுத்தும் விதமாக முதல்முறையாக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் தலைவர் அண்ணாமலை என அனைவரும் மூர்த்தி வீட்டிற்கு சென்று தேனீர் குடித்த புதுவித விளம்பரத்தை ஏற்படுத்தினர்.

இது அனைத்தும் அவர்களின் முக்கிய நோக்கமான தலித் வாக்குகளை அள்ளுவதே என்று பலரும் கூறுகின்றனர். அதேசமயம் தலித் ஓட்டுகள் எப்பொழுதும் பெரும்பான்மையாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு செல்வதை தடுப்பதே இவர்களின் முதல் கட்ட நடவடிக்கை. இவர்களின் திட்டம் பழித்து 25 இடங்களை பெறுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version