ஆட்சி அமைக்கப்போவது யார்? மோடியா? ராகுலா? – பிரசாந்த் கிஷோரின் அதிரடி கணிப்பு!

0
758
modi rahul prashanth

கடந்த மக்களவை தேர்தலை விட அதிக இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதுவரை 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மட்டுமே மீதம் உள்ளது.

இந்நிலையில், அடுத்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு,

வரும் ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எதிர்காலம் தான் சொல்லும். ஆனால் தேர்தல் முடிவு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் என்னைப் பொறுத்த வரையில் ஒரே விஷயத்தை தொடர்ந்து கூறி வருகிறேன். அது எனக்கே சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த தேர்தலை கடந்த ஐந்து மாதங்களாக நீங்கள் எப்படி மதிப்பீடு செய்தீர்கள் என்பது விஷயம் இல்லை. நான் இப்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் சொல்கிறேன்.

பொதுவாக ஆளும் கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அவர்களின் தலைவர்களுக்கு எதிராக களத்தில் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பார்கள்.

அப்படியான ஒரு நிலை நாட்டில் நிலவில்லை என்பது தான் உண்மை. அப்படியே இருந்தாலும் மாற்றாக ஒரு நபரை நம்பி மக்கள் உணர்வதாக தெரியவில்லை. குறிப்பாகராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மக்களின் குரலாக நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை.

10 ஆண்டுகளில் நாட்டின் கிழக்கு, தெற்கு பகுதியில் உள்ள சுமார் 225 தொகுதிகளில் பாஜக பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்யவில்லை. சொல்லப்போனால் 50-க்கும் குறைவான இடங்களைத்தான் தற்போது வைத்துள்ளது. ஆனால், இந்தமுறை பாஜகவின் அந்த இடங்களில் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரிக்கும்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.