Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் எதிர்ப்பு அரசியலை சமாளிக்க அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஏற்கனவே இரண்டு முறை திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கூட்டம் நடைபெறாமலே போய் விட்டது. இந்த நிலையில் மீண்டும் முயற்சி செய்து நேற்று ஒரு வழியாக  எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் திமுக  எம்.பி.க்கள் அனைவரும் அறிவாலயத்திற்கு வந்து விட்டனர். 

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முதலில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் எம்.பிக்களுக்கு கூறிய வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு அவருடைய பேச்சு தீவிர அரசியல் பக்கம் சென்றுள்ளது. இதில் அவர் பேசியதாவது,தேசிய அளவில் பாஜக மிகவும் ஆக்ரோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்கொள்ள நாமும் ஆக்ரோசமாக இருந்தோம். ஆனால், பாஜக நம்மை அச்சுறுத்த நினைக்கிறது. நமக்கு ஆதரவான தொழில் அதிபர்களை குறி வைக்கிறது. 

எனவே டெல்லியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். அவருக்கு பிறகு பேசிய திமுக தலைவர் ஸ்டாலினும் இதை குறிப்பிட்டு தான் பேசியதாக சொல்கிறார்கள். தொகுதிக்கு செல்ல வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக செலவிட வேண்டும் என்பன போன்ற வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு மிகவும் சீரியசாக அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் போன்றோர் கூட பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ள தயாராகி விட்டனர். அந்த அளவிற்கு பாஜக நாட்டில் தற்போது பலம் பொருந்திய கட்சியாக மாறிவிட்டது. அசுர பலத்துடன் இருப்பதால் பாஜக தற்போது என்ன வேண்டுமானாலும் செய்யும்? அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் காலூன்றிய பாஜக அடுத்ததாக கேரளா, தமிழகத்தை தான் குறி வைத்துள்ளது.

தமிழகத்தில் பாஜக நம்மை தான் பிரதான எதிரியாக கருதுகிறது. அதனால் நாமும் அவர்களை அப்படி கருதுவதை தவிர வேறு வழியில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் பாஜகவின் புரோக்கர்கள் சிலர் நம் எம்பிக்களை சுற்றி வருவது எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் தமிழகத்தில் காலூன்ற எதுவும் செய்வார்கள். நமது எம்பிக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இப்படி எவ்வளவு தான் தங்கள் கட்சியை சேர்ந்த எம்.பிக்களுக்கு அறிவுரை கூறினாலும் மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சியமைத்துள்ள பாஜகவை கண்டு எல்லா கட்சிகளும் அச்சமடைந்துள்ளது போல திமுக தரப்பும் அச்சத்தில் உள்ளதாகவே கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version