வெல்லப்போவது ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையா? சீறும் பாஜக பாயும் திமுக!

0
207

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கின்றது. அதோடு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கின்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதேபோல அரசியல் சூழ்நிலைகளும் மாறத் தொடங்கியிருக்கிறது.

இதனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிக ஜரூராக நடந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும் அதோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் என அந்த கூட்டணியிலும் பல கட்சியினருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அந்தவிதத்தில் அன்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். அதோடு மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த முறை எப்படியாவது பாஜகவை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பதில் அந்த கட்சி மிக உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தஞ்சாவூரில் எதிர்வரும் 10ஆம் தேதி பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்தாகி இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகை காரணமாக இந்த நிகழ்ச்சி மாற்றப்பட்டு இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முயற்சி செய்து வருகிறது. அதற்கான சந்தர்ப்பமும், சூழ்நிலையும், இதுவரையில் அந்த கட்சிக்கு கூடி வரவில்லை என்றுதான் தெரிவிக்க வேண்டும். என்றால் இதுநாள்வரையில் தமிழகத்திலே பாஜகவிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக கூட்டணி கூட அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் தற்சமயம் அதிமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி அல்லது பலமான கூட்டணியாக இருப்பதால் பாஜகவின் நீண்ட நாள் கனவை நனவாக்குவதற்கு அந்த கட்சி முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.அதேசமயம் பாஜக ஒரு மதவாத கட்சி என்ற கருத்து தமிழகத்திலே மிக ஆழமாக இருந்து வருகிறது. ஆகவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் பாஜகவை நிராகரித்து வருகிறார்கள். அதேபோல தமிழ்நாட்டிலே அனேக மக்கள் பாஜகவை விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

திராவிட சித்தாந்தத்தையும் கடவுள் மறுப்புக் கொள்கையையும் வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்ப்பதற்கு திமுக களமிறங்கி இருக்கிறது இருந்தாலும் தமிழகத்தில் இந்துக்களின் ஓட்டு எண்ணிக்கை அதிகம் என்ற அடிப்படையில் இந்துக்களை கவரும் விதமாக தேர்தல் வியூகங்களை வகுத்து களமிறங்க இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி ஆகவே இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தமிழக மக்களிடையே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது தமிழகத்திலேயே பாஜக தன்னுடைய நீண்ட நாள் கனவை நனவாக்குவதற்கு களமிறங்கி இருக்கிறது அதேபோல கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் அமர முடியாத ஒரு தீராத தாகத்துடன் திமுக களமிறங்கி இருக்கிறது இந்த இரு கட்சிகளில் எந்தக் கட்சி வெற்றி வாகை சூடும் என்பதை தமிழக வாக்காளர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.