Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்

கொரோனா தொற்றுநோய் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாதாரண பொதுமக்கள் முதல் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வரை, என்று பல தரப்பை சேர்ந்த மனிதர்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

அனைத்து நாடுகளிலும் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், முழுமையாக இந்த கொரோனா தொற்றை அழிப்பதற்கு இன்னும் மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக கட்சி பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி இந்த கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். ராஜ்சமந்த் தொகுதியின் சார்பாக மூன்று முறை கிரண் மகேஸ்வரி அவர்கள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரன் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டு, மேற்படி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  ஆனால் சிகிச்சை பலனின்றி கிரண் மகேஸ்வரி அவர்கள் நேற்று இரவு உயிரிழந்தார். இவரின் வயது 59 ஆகும்.

இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version