Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் மரணம்: பிரதமர் இரங்கல்!

மகாராஷ்டிராவில், பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள செல்சுரா பாலத்திற்கு அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

பாஜக எம்.எல்.ஏ விஜய் ரஹாங்க்தலே மகன், சவாங்கி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் காரில் சென்றபோது செல்சுராபாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ,எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி கிட்டத்தட்ட 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தது. அதில் காரில் இருந்த நண்பர்களுடன் 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்களின் மூலம் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் பாபாசாகிப் தோரட்; இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அப்போது வாகனம் எதுவும் வராததும், மாணவர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், காரில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே வீசப் பட்டதாகவும் தெரிவித்தார். காரை ஓட்டி சென்றது யாரென கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் செல்சுரா அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

Exit mobile version