நாடும் முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின பிரிவை சேர்ந்தவருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் கொள்ளையடிக்க முடியாது என்றும், இதற்க்கு பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுப்பார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த ஐந்தாம் பட்ட தேர்தலில் பீகார் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும், ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்று தொகுதிகளுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 தொகுதிக்கும், ஒடிஷா மாநிலத்தில் ஐந்து தொகுதிக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் 14 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மொத்தம் 49 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், மக்களை முட்டாளாக்கி அரசியலில் வெற்றி பெற காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்வதாகவும், ஆனால் இதனை முறியடித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார் என்று காங்கிரஸ் கூட்டணியினர் கூறியுள்ளனர். ஆனால் அது ஒரு பொய்யான பிரச்சாரம். அவர் ஒருபோதும் இட ஒதுக்கெட்டின் மீது கை வைத்ததே இல்லை. இந்தியா கூட்டணி மட்டுமல்ல யார் நினைத்தாலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டின பிரிவை சார்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை கொள்ளையடிக்க முடியாது. இது பிரதமர் மோடி தரும் உத்திரவாதம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜகவுக்கு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மக்களவைத் தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.