தோல்வியின் விரக்தியில் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை மறந்து விட்டாரா? மீண்டும் புதிய சர்ச்சை

0
156

தோல்வியின் விரக்தியில் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை மறந்து விட்டாரா? மீண்டும் புதிய சர்ச்சை

தமிழக அரசியல் சூழ்நிலை திமுக ஆட்சியமைக்க சாதகமாக இருந்தும் திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் வழக்குகளால் தைரியமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் பொது இடங்களில் சிறு பிள்ளைகளை விட மோசமாக உளறி வந்திருக்கிறார். இதையெல்லாம் தமிழக மக்கள் மீம்ஸ் மூலம் நகைச்சுவையாகவும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்யவும் பயன்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்காக அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததும் இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின் பொறுமையிழந்து விரக்தியின் உச்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சித்திருந்தார். ஸ்டாலினின் இந்த செயல் அவருடைய சொந்த கட்சியினரையே அதிர்ப்தியடைய செய்தது.

இந்த விமர்சனங்களே மறையாத நிலையில் சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை களவாணி என்று திமுக தலைவர் ஸ்டாலின் நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்திருந்தார். இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் நாராயணன் திமுக தலைவர் ஸ்டாலினை புறம்போக்கு என்று விமர்சனம் செய்திருந்தார். கட்சி தொண்டர்களுக்கு நாகரிக அரசியலை கற்று கொடுக்க வேண்டிய தலைவர்களே தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் நாகரிகமற்ற வார்த்தைகளால் விமர்சனம் செய்து கொண்டிருக்க இதை பார்த்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து #புறம்போக்குஸ்டாலின் என்ற ஹேஷ் டேக்கில் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தது இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி விட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் செய்தது அவருக்கே எதிராக திரும்பி விட்டது. இனியாவது திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை கடைபிடிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.