Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

#image_title

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

பாஜக மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியை சேர்ந்த பத்மஜா எஸ். மேனன் செயல்பட்டு வருகிறார். இவர் கொச்சி மாநகராட்சி பாஜக கவுன்சிலராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில் கல்வி நிலை குழு தொடர்பாக கொண்டுவரப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு அளித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியில் கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, கட்சியின் மாநில தலைமையால் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் அவர் பாஜக மகளிர் அணி தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version