BJP: பட்ஜெட் தாக்கல் குறித்து அண்ணாமலை விரதம் மேற்கொண்டு பாஜக-வை திசை திருப்ப முயற்சிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழகம் பயன்பெறும் வகையில் இந்த முறையும் எந்த ஒரு திட்டமும் இல்லை. இது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. மேலும் பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பதால், அதையொட்டியே பல நலத்திட்டங்கள் அமைத்துள்ளது. இது குறித்து ஆளும் கட்சி முதல் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏன் அதன் கூட்டணியில் இருக்கும் பாமக-வும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில் அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவே பெரியார் பல்கலைக்கழக மாணவி வழக்கில் சரியான தீர்ப்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக 11 சவுக்கடிகளை தனக்குத்தானே கொடுத்துக் கொண்டார். மேலும் திமுக ஆட்சி ஒழியும் வரை காலணி அணிய மாட்டேன் என்றும் சபதம் எடுத்துள்ளார். சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டதாக கூறும் அண்ணாமலை மேலிடத்தில் தமிழகத்திற்கென்று திட்டங்களை கேட்டு வாங்கி தரலாம்.
அப்படி மறுக்கும் பட்சத்தில் அக்னி பரீட்சையை தனது சொந்த கட்சிக்குள்ளேயே நடத்தலாம் அல்லவா?? என்று கேள்வியை நெட்டிசன்கள் முன் வைத்து வருஈன்றனர். மாணவிக்காக 11 சவுக்கடிகள் கொடுத்துக் கொண்ட அண்ணாமலை தனது தமிழ்நாட்டு மகளுக்காக ஏதேனும் விரதத்தை மேற்கொண்டு பாஜக தலைமையை திசை திருப்ப முயற்சிகலாம் என கூறி வருகின்றனர். அதை விட்டுவிட்டு சொந்த கட்சி என்பதால் மேலிடத்திற்கு சாதகமாக எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்த பட்ஜெட் என அவர் கூறியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.