கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் 

0
143
Madan Ravichandran

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம்

பாஜகவின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி நடந்ததாக ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில் தான் வெளியிட்டதாக அந்த வீடியோவில் மதன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கே.டி.ராகவன் தான் வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.மேலும் இந்த வீடியோ விவகாரம் குறித்த தன்னுடைய விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.இந்த விவகாரமானது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது.கே.டி.ராகவன் பாலியல் குற்றசாட்டுக்கு ஆளானதால் பலரும் பாஜகவை கிண்டலடித்து பதிவிட்டு வந்தனர்.

அதே நேரத்தில் மற்ற கட்சிகளை போல குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி தராமல் பாஜக தலைமை சம்பந்தப்பட்ட பதவியிலிருந்து நீக்கி முறையான நடவடிக்கை எடுத்திருக்கிறது.இது குறித்து உண்மையை கண்டறிய தனியாக ஒரு குழுவையும் நியமித்துள்ளது.இதன் அடிப்படையில் தமிழக பாஜக தலைவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் மதன் எதோ உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும்,வீடியோவை கட்சி தலைமையிடம் காட்சிப்படுத்தாமல் வெறும் வார்த்தைகளை நம்பி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியதாகவும் அண்ணாமலை விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் பாஜகவில் இருந்து கொண்டே கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மதன் செயல்படலாமா என தொண்டர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதன் அடிப்படையில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.ஏற்கனவே இவர் கே.டி.ராகவன் குறித்த வீடியோ வெளியிட்ட மதன் டைரீஸ் யூ டியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.