Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி!

தூத்துக்குடி மாவட்டம் சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி நடத்தினர். பாஜக கொடியுடனும் மற்றும் காவி கொடியுடனும் பலாயிரம் பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணியை போலீசார் உடனடியாக தடுத்து, முக்கிய நிர்வாகிகளை மட்டும் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் தேசிய மகளிரணி செயலாளர் விக்டோரியா, மாவட்ட தலைவர்கள் பி.எம். பால்ராஜ், பி.ராமமூர்த்தி மற்றும் இந்து முண்ணனியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா எம்.பி அவர்களும் கலந்துகொண்டார். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைதாங்கினார்.

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறை தமிழகத்தில் நடக்காமல் இருப்பதற்கு தமிழக அரசு காவல்துறையின் மூலம் சரியான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

Exit mobile version