அரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர்

0
180

அரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர்

சேலம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அரக்கோணத்தில் வசிக்கும் லட்சுமி ரெட்டி எனும் பெண் சேலத்தில் தன்னுடைய இரண்டு ஏஜெண்டுகள் மூலமாக சுமார் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார் .

தன்னை ஒரு பாஜக பிரமுகர் என்றும் , தான் பல பேருக்கு வேலை வாங்கி தந்து உள்ளதாகவும் தனது ஏஜெண்டுகள் மூலம் ஆசை வார்த்தை கூறி நூதனமான முறையில் ஏமாற்றி உள்ளார்.ஒவ்வொரு நபர்களிடமும் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை வசூலித்து கொடுத்துள்ளனர் இந்த ஏஜெண்டுகள் .

ஒரு கட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த 32 பேரும் காவல்துறையில் புகார் கொடுத்து உள்ளனர்.கடந்த மூன்று மாதமாக இது சம்பந்தமாக ஏமாந்த நபர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தும் காவல்துறையின் அலட்சியமான பதிலாலும் அலைக்கழிப்புகளாலும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளனர்.

புகார் மனுவை கூட முறையாக வாங்கி நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர்.அரசு வேலைக்கு ஆசைப்பட்டு ,கடன் வாங்கி கொடுத்த சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப் பட்டுள்ளனர்.இதை புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு கவனத்தில் எடுத்து, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏமாந்த அப்பாவி அபலைகள் கவலையோடு காத்திருக்கின்றனர்.

கொரோனா கால கட்டத்தில் இழந்த பணம் கிடைக்குமா என்று காத்திருக்கும் இந்த 32 பேருக்கும் நீதி கிடைக்க காவல் துறை உதவ வேண்டும் ..