பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு! கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாஜக!

0
115

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2014ஆம் வருடம் இந்தியாவின் பிரதமராக அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினார்.

அதற்கு முன்பாக அவர் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் தொடர்ந்து 20 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து பல சாதனைகளை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒருவர் ஒரு மாநிலத்தின் 2 முறை ஆட்சியை கைப்பற்றுவது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து 2 முறை ஆட்சியை கைப்பற்றியவர்கள் வெகு சிலரே.

ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 4 முறை முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக அந்த மாநில அரசை வழிநடத்தினார். அதாவது, தொடர்ந்து 20 ஆண்டு காலம் பாஜகவை அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திக் காட்டியவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.

ஆவர் பிரதமரான பிறகு குஜராத் மாநில முதலமைச்சர் என்ற பொறுப்பை ராஜினாமா செய்திருந்தாலும் கூட இன்னமும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. அதோடு அந்த மாநிலத்தின் மிகப்பெரிய சக்தியாக பாஜக உருவெடுத்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான்.

இதையெல்லாம் கணக்குப்போட்டு பார்த்த பாஜகவின் தலைமை அவரை கடந்த 2014ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. பிரதமர் வேட்பாளராக அறிவித்த நாள் முதலே அவருக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு தொடங்கிவிட்டது.

இந்தியா முழுவதும் கிடைத்த வரவேற்புடன் மக்கள் செல்வாக்கும் அதிகமாக இருந்தது. அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை கைப்பற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற அவர் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் வெற்றி தற்போது வரையில் அவரே பிரதமராக தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

அந்த வருடம் மே மாதம் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலத்தின் ஒன்று மற்றும் 2ம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நோய்த் தொற்று பரவல் காரணமாக, நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் எதிர்வரும் மாதம் 30ஆம் தேதியுடன் மகேந்திர மோடி பிரதமராக 2வது முறை பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று கட்டுக்குள் இருப்பதால் 3வது ஆண்டு விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு அந்த கட்சியின் தலைமை திட்டமிட்டிருக்கிறது.

அந்த விழாவை எப்படி கொண்டாடுவது என்பது தொடர்பாக ஆலோசிக்க மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், ராஜீவ் சந்திரசேகர், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்கள் அருண் சிங், சிடி ரவி, புரந்தரேஸ்வரி, தலைமை செய்தித் தொடர்பாளர் அணில் பலனி, சிவப்பிரகாஷ், லால் சிங், ஆர்யா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினய் சகஸ்ரபுத்தே, ராஜ்தீப் ராய், அபராஜிதா சாரங்கி, உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த குழுவின் கூட்டம் நேற்று பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மாற்றம் நிர்வாகிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். ஒரு வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன மத்திய அரசின் திட்டங்களை பிரபலப்படுத்தும் விதத்தில் எந்தெந்த நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது எதிர்வரும் நாட்களில் இறுதி செய்யப்படும் என்று பாரதிய ஜனதாவின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.