தமிழக அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி! அதிர்ச்சியில் திமுக!

0
110

கோயமுத்தூர் மாவட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் பாஜக சார்பாக நேற்றையதினம் வந்ததாக சொல்லப்படுகிறது இந்த கூட்டத்தில் கோயமுத்தூர் வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் போன்ற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை உண்டாக்கவும், நிர்வாக ரீதியாக மாநில சீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தை கொங்கு மண்டலம் என்று புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் மத்திய அரசு இலவசமாக கொடுக்கும் தடுப்பூசிகளை எல்லோருக்கும் உரிய சமயத்தில், உரிய அளவில் கொடுக்காமல் சென்னை மண்டலத்திற்கு அதிகமாகவும் கோயம்புத்தூர் மண்டலத்திற்கு மிகவும் குறைவாகவும் ஒதுக்கீடு செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஜெய்ஹிந்த் என்ற நம்முடைய தேசபக்தி முழக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சட்டசபை உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் சட்டசபையில் அவமதித்ததற்கும் அதற்க்கு துணையாக நின்ற தமிழக அரசிற்கும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை விவசாயிகளை பாதுகாப்பதற்காக கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் என்று நியமனம் செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதன் மூலமாக கொங்கு மண்டலத்தை தனியாக பிரிப்பதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

அதேநேரம் கொங்கு மண்டலத்தை மட்டும் எதற்காக தனியாக பிரிக்க பாரதிய ஜனதா கட்சி இவ்வாறு ஒரு தீர்மானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று யோசித்தோம் ஆனால் தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கும் இடமாக கோவை மாவட்டம் தான் விளங்குகிறது. ஆகவேதான் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கொங்கு மண்டலத்தை தனியாக பிரிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கு தமிழக அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.