Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி!

#image_title

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி!

“எனது வீட்டை மட்டும் நினைத்து இருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீட்டை கட்டிக் கொடுத்திருக்க முடியாது” என டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2014, 2019 தேர்தலில் தொடர்ந்து ஆட்சி அமைத்து வரும் பாஜக மூன்றாவது முறையாகவும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ஜே பி நட்டா ராஜ்நாத் சிங் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ” நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. இதிலிருந்து மீண்டும் பாஜக ஆட்சியை அமைக்கும் என உலகமே அறிந்துள்ளது. எனவே பாஜகவை 370 இடங்களிலும் பாஜக என்டிஏ இந்திய ஜனநாயக கூட்டணியை 400 இடங்களிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். அடுத்த 100 நாட்கள் மிக முக்கியமாக உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதே எங்கள் நோக்கம். பதவிக்காக ஆட்சி கேட்கவில்லை. நான் எனது வீட்டை பற்றி நினைத்திருந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு என்னால் வீட்டை கட்டிக் கொடுத்திருக்க முடியாது. நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராது வேலை செய்து வருகிறோம். நாட்டு மக்களுக்காகவே வாழ்கிறேன். அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஐந்து நூற்றாண்டுகளாக இருந்த மக்களின் காத்திருப்பை பாஜக நிறைவேற்றியுள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு கர்தார்பூர் நெடுஞ்சாலையை திறந்துள்ளோம்.” என பிரதமர் மோடி பெருமிதமாக பேசியுள்ளார்.

Exit mobile version