Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்!

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்!

கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்றத்தில் வரும் நாட்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது இந்த கூட்டதொடரில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், முரளிதரன்,பிரகலாத் ஜோஷி , பாஜக தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் பிரகலாத் ஜோஷி! செய்தியாளர்களிடம் அவர் கூறியதவாறு:

பாஜக எம்பிகள் நடத்தும் கூட்டங்களில் திணை பொருட்கள் குறித்தும், அதன் ஊட்டச்சத்துக்கள் குறித்தும் பிரசாரம் வேண்டும் என்றும்,
தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியதாகவும், மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை பாஜக எம்பி கள் ஊக்குவிக்க வேண்டுமென்றும் குறிப்பாக கபடி போன்ற இந்திய விளையாட்டுகளை பெரிதும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் பாஜக எம்பிகளுக்கு அறிவுறுத்தினார் என்றும் கூறினார்.

மேலும் இந்தியா ஐநாவிற்கு எழுதிய கடிதத்தின் படி வருகின்ற 2023 ஆம் ஆண்டு சர்வதேச திணை ஆண்டாக கொண்டாடப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Exit mobile version