பெரம்பலூர் மாவட்ட பிஜேபி துணைத்தலைவர், மற்றும் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி அருகே 2 கிலோ போதைப் பொருளான அபின் கடத்தியதற்காக, திருச்சி அருகே ஹூண்டாய் காரோடு பிடிபட்டார். அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என தெரயவந்துள்ளது.
அண்மையில் ஜூன் 12ம் தேதி மாநிலத் தலைவர் முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கடத்தலில் கைதான அடைக்கலராஜ் பிஜேபி கட்சியில் பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு, இவர் கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், இவர் திருச்சி வழியாக தனது வாகனத்தில் போதைப் பொருளான அபின் இரண்டு கிலோ கடத்திச் சென்றுள்ளார். அங்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார், திருச்சி அருகே அவரது ஹூண்டாய் வாகனத்தில் போதை பொருள் அபின் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனடிப்படையில் தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.