Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பாஜக!! OPS கைவிரிப்பு EPS-க்கு அழைப்பு!!

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பாஜக!! OPS கைவிரிப்பு EPS-க்கு அழைப்பு!!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் 2024-இல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணியில் அரசியல் கட்சிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டு வருகிறது பாஜக. இந்நிலையில் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டம் வரும் ஜூலை 17,18ல் பெங்களூருவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தான் தே.ஜ கூட்டணி ஜூலை 18ல் டெல்லியில் ஆலோசனை கூட்டத்தை கூட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து விடாமல் இருப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜக கூட்டணியை அசைத்து இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி,ஜி கே வாசன், அன்புமணி ராமதாஸ்,ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஓபிஎஸ்,டிடிவி தினகரனை கைவிட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் தொடங்க இன்னும் சில மாத காலங்களே உள்ள நிலையில் இப்பொழுதே ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் அதிமுகவை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் தேர்தல் நெருங்கும் போது கூறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் டெல்லியில் நடக்கும் பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்லும் பட்சத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க போகிறது. பாஜகவின் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version