Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக பக்கம் குறியை திருப்பும் பாஜக!! புதிய ஆளுநராக வரபோவது யார்!!

BJP turns DMK page mark !! Who is going to be the new governor !!

BJP turns DMK page mark !! Who is going to be the new governor !!

திமுக பக்கம் குறியை திருப்பும் பாஜக!! புதிய ஆளுநராக வரபோவது யார்!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி இல்லை என்றாலும் மதிக்கத்தக்க வெற்றியை எட்டிபிடித்துள்ளது. தன் கட்சியின் பெரும் பண்மையையும் நிரூபித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 7-ம்தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்கவிருக்கிறார். ஒரு புறம் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அமைதியாகவும், எளிமையாகவும் மற்றும் விறுவிறுப்பாகவும் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்காக நாள்தோறும் அதிகாரிகளிடமும் தீவிரமான ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் புதிய ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கிரண்பேடி என்றதுமே பலருக்கு வியத்துவிட்டிறுக்கும். கடந்த 2016-ல் இருந்து புதுச்சேரிக்கு இவர் தந்த குடைச்சல் கொஞ்சநஞ்சமல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

கிரண்பேடியை தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை கிரண்பேடி இல்லாவிட்டாலும், மத்திய பாஜக அரசுக்கு சம்பத்தப்பட்ட ஒருவரை தமிழகத்தின் ஆளுநராக நியமிப்பதன் மூலம், மு க ஸ்டாலினின் செயல்பாடுகளை தடுக்க முடியும் அல்லது அதற்கு முட்டுக்கட்டை  போட முடியும் என்று பாஜக திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் சற்று முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இதற்கான நிலையான அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.

Exit mobile version