பாஜகவில் பதற்றம்… நட்சத்திர வேட்பாளர் வேட்புமனுவில் சிக்கல்!

0
107
Modi

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை கடந்த 12ம் தேதி முதல் நேற்று மாலை 3 வரை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6,319 பேர் வேட்பு மனுக்களில், ஆண்கள் 5,363 பேரும், பெண்கள் 953 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகாவும், திருநங்கைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

 

Annamalai
Annamalai

இந்நிலையில் இன்று காலை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. வேட்புமனு பரிசீலனை முடிந்த பிறகு எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்ற விவரம் அறிவிக்கப்படும். பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இரு தினங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்தார். தொண்டர்களோடு தொண்டராக சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான அண்ணாமலையின் வேட்புமனுவை அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை வேட்புமனுவில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக திமுக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டினர். அண்ணாமலை மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதனை அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். எனவே பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.