Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேரம் பார்த்து கழுத்தை அறுத்த அதிமுக…! கடுப்பில் பாஜக…!

திருமாவளவன் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதற்கு எதிராக பேசி இதற்கு எதிராக நடக்கவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

கடந்த மாதம் மனுஸ்மிருதி என்ற நூல் சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று வைரலானது அந்த வீடியோவில் திருமாவளவன் பெண்களைப் பற்றி அவதூறாக பேசி இருந்தது சம்பந்தமாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது ஆனால்

திருமாவளவனோ நான் பெண்களைப் பற்றி தவறாக பேசவில்லை மனுதர்ம நூலில் என்ன கூறப்பட்டு இருந்ததோ அதையே தான் நான் தெரிவித்தேன் என்று திருமாவளவன் ஒரு விளக்கத்தை அளித்தார் ஆனாலும் அந்த காணொளிக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.

இதனைத்தொடர்ந்து திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிதம்பரம் தொகுதியில் பாஜக மகளிரணி அவருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது இந்தப் போராட்டம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகை செய்யும் என்ற காரணத்தால் போலீசார் போராட்டத்திற்கு தடை விதித்தனர்.

இந்நிலையில் தடையை உடைத்து போராட்டத்தில் பங்குபெற சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டு போன குஷ்புவை காவல்துறையினர் முட்டுக்காடு அருகில் வைத்து கைது செய்து இருக்கிறார்கள் மாமல்லபுரம் ஏடிஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான காவல்துறையினர் குஷ்புவை கைது செய்துள்ளார்கள்.

Exit mobile version