Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!!

#image_title

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும்! அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைப்பார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்க பாஜக முனைப்பில் இருக்கிறது. ஆனால் இந்த முறை எதிர்கட்சிகளை ஒன்றினைத்து பாஜக கட்சியை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் “2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம். நாங்கள் நல்ல முறையில் பணியாற்றியுள்ளோம். பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் ஆட்சி அமைப்போம். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் எங்களை மீண்டும் தேர்வு செய்வார்கள்” என்று அவர் பேட்டி அளித்தார்.

 

Exit mobile version